அரசாங்க பாடசாலைகளில் பேணப்படும் சம்பவத் திரட்டுப் புத்தகம் ஆங்கிலத்தில் Log Book என்பது மிக முக்கியமான ஆவணமாகும். இது அதிபரது கட்டுப்பாட்டில் இருக்கும்.அதிபர்கடமையில்இல்லாது லீவில் நிற்கின்ற போது பாடசாலைக்கும் பொறுப்பாக இருக்கும்பிரதியதிபர்,உதவி அதிபர் அல்லது சிரேஸ்ட ஆசிரியரின்

பொறுப்பில் இருக்க வேண்டிய தொரு  முக்கிய ஆவணமாகும்.இதனை வேறு எவரும் தம்பொறுப்பில் வைத்திருக்க கூடாது.

#சில பாடசாலை அதிபர்கள் இதனை தான் பாடசாலையில் கடமையில் இல்லாத சமயம் தமது மேசை இலாச்சினுள் ,அலு மாரியில் வைத்து பூட்டி வைத்து செல்லல் அல்லது பாடசாலை சிற்றூழியரிடம் கொடுத்து விட்டு செல்கின்ற சம்பவங்கள் இடம்பெறுவது உண்டு. அவ்வாறான ஒரு சில சம்பவங்களை எனது பாடசாலைக் தரிசிப்பின்போது அவதானித்துள்ளேன்.

#இந்த சம்பவத் திரட்டு எவ்வாறு பேணப்பட வேண்டும், எதை எழுத வேண்டும் எதை எழுதக்கூடாது என்பது பற்றி கல்வி அமைச்சு 41/1958 ம் ஆண்டு சுற்றறிக்கை ஒன்றின் மூலம் தெளிவு படுத்தி உள்ளது.

இந்த சுற்றறிக்கையின் உள்ளடக்கம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என் நான் கருதுகிறேன்.இந்த சுற்றறிக்கையை கல்வி அமைச்சு இதுவரை நான் அறிந்தவரையில்மாற்றியமைக்கவோ, திருத்தவோ இல்லை.

#;பாடசாலை சம்பவத்திரட்டு புத்தகத்தில் பாடசாலை அதிபர், மேற்பார்வைக்கு வருகை தரும் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், மாகாண ஆளுனர், பொதுச் சுகாதார அதிகாரி, சுகாதார அதிகாரிகள், ராஜதந்திர அதிகாரிகள், கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தமது மேற்பார்வை குறித்து பதிவுகளை இடமுடியும்.

#கற்பித்தல் பணி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு வரும் சேவைக்காக ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர், கல்விக்கல்லூரி விரிவுரையாளர் போன்றோர் சம்பவத் திரட்டு புத்தகத்திற்கு பதிலாக பாடசா லைகளில் பேணப்படும் கற்பித்தல் மேற்பார்வை புத்தகத்தில் பதிவுகளையும் ஆசிரியர் தொடர்பான நடத்தை வேறு பாடுகளையும் பதிந்து அதற்கான தீர்வு களையும் முன்வைக்க வேண்டும்.

#ஆசிரியர்கள் பற்றிய குறைகாணல் , குற்றம் காணல்,கண்டித்தல், மரியாதை குறைவான வாசகங்களை பாடசாலை

சம்பவத் திரட்டு புத்தகத்தில் ஒருபோதும் பதியக்கூடாது. அது தொடர்பாக மேற்பார்வை புத்தகத்தில் பதிவிட்டு பின்னர் தமது அவதானத்தை கடிதம் மூலம் அதிபரூடாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அறிவித்தல் வேண்டும்.அக்கடிதப்பிரதி ஆசிரியரது சுயவிபரக்கோவையில் இடக்கூடாது.

#சம்பவத் திரட்டு புத்தகத்தில் இடப்படும் பதிவுகள் நீக்கப்படவோ ,திருத்தப்படவோ வெட்டிவிடவோ கூடாது. இதற்கு பதிலாக இன்னுமொரு பதிவை முன்னைய பதிவி வில் உள்ள தவறை குறிப்பிட்டு புதிய பதிவை இடவேண்டும்.

#சம்பவத் திரட்டு புத்தகம் ஒரு வரலாற்று ஆவணமாகையால் அதனை மிகக் கவன மாகவும் , நேர்த்தியாகவும் ஒவ்வொரு பக்கத்திற்கும் தொடர் இலக்கமிட்டு பாவிக்க வேண்டும். எவருக்காவது சம்பவத் திரட்டு புத்தகத்தின் பக்கப்பிரதி வழங்க வேண்டியேற்பட்டால் அதனை போட்டோ பிரதியாக வழங்காது அதனை பிரித்தெயுத்த பிரதியாக எழுதி அல்லது தட்டச்சில் இட்டு வழங்க வேண்டும்.

Thanks, Mukthar Sir