இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தலைவர்களாவர். அவர்களே நாட்டையும் சமூகத்தையும் நிர்வகிக்க இருப்பவர்கள். அதனால் ஒவ்வொரு பிள்ளையையும் சீரான உடல், உள ஆரோக்கியம் மிக்கவர்களாக வளர்த்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.

அந்த வகையில் இன்று மருத்துவதுறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புதுப்பெயர்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறு இந்த தலைமுறையில் கண்டறியப்பட்ட ஒரு வார்த்தைதான் ஆட்டிஸம் (Autism). 

ஆய்வுகளின் படி உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

2010ஆம் ஆண்டில் இலங்கையில் கொழும்பு மாவட்டத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் பிரகாரம், எமது நாட்டிலுள்ள குழந்தைகளில் 93 பேருக்கு ஒருவர் வீதம், இந்த ஒட்டிசத்தால் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன​ர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின், ஜோன் ஹொப்கின்ஸ் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணராக லியோ கெனர் என்பவராலேயே, இந்த ஒட்டிசம் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1943ஆம் ஆண்டில், மனவள அபிவிருத்தி தொடர்பில், சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் போதே, இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டிசம் குறித்து மருத்துவர்கள் விவரிக்கையில், மூளையில் உள்ள சில நரம்புகள் ஒலி கேட்கும் திறன் குறித்த சமிங்கைகளை மிக துல்லியமாக பிரதிபலிக்காததே இத்தகைய பாதிப்புக்கு காரணம் என்கிறார்கள். சில குழந்தைகள் இத்தகைய பாதிப்பு இருந்தாலும், அவர்களால் சில விடயங்களை வெளிப்படுத்த இயலாமல் இருந்தாலும், திறமைசாலிகளாக இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு முறையான பேச்சு பயிற்சி மற்றும் ஒக்குபேஷனல் தெரபி, சில உணவு கட்டுப்பாடுகள், பயிற்சிகள் அடங்கிய கூட்டு தெரபிகளை வழங்கினால், இவர்களுக்கு முழுமையான நிவாரணம் அளிக்க முடியும் என்கிறார்கள்.

ஆட்டிசம் (Autism) என்றால் என்ன?

ஆட்டிசம் என்பது “மூளை தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம்”. இது ஒரு குறைபாடே தவிற ஒரு நோயல்ல.

ஆட்டிசத்தை எவ்வாறு அடையாளம் காண்பது

சிறுகுழந்தை (infancy) 18 முதல் 24 மாதங்களில் இது தெரியவரும். பொதுவாக குழந்தை பருவத்தில் (Childhood) 24 மாதம் முதல் 6 வயது-களில் இதன் அறிகுறிகள் தெரியவரும். அத்தோடு அவர்களின் பிரச்சினைகளாக தொடர்பாடல், சமூகப்பிரச்சினைகள் என வகைப்படுத்திக் கொள்ள முடியும். 

தொடர்பாடல் பிரச்சினை

  1. ஒரு வயதாகும்போது, தனிச் சொல்லைக்கூட பேசாதிருத்தல் அல்லது இரண்டு வயதாகும்போது, இரண்டு சொற்களைக்கூட இணைத்துப் பேசாதிருத்தல்.
  2. சாதாரணமாக ஆரம்பிக்கும் பேச்சு, போகப்போக, ஏற்கெனவே பேசிய வார்த்தைகளைக்கூட பேசாதிருத்தல்.
  3. விளக்கமின்மை, யாராலும் புரிந்துகொள்ள முடியாத மொழி போன்றவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்தல்.
  4. வேறொருவர் சொல்லும் வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லல்.

சமூகப் பிரச்சினை

  1. கண்களையும் முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தல் அல்லது பார்ப்பதைக் குறைத்தல்.
  2. ஒரு வயதாகும்வ​ரை, விரலை நீட்டி, சுற்றுச்சூழலில் இருப்பதாகக் காண்பிக்காதிருத்தல்.
  3. மற்றையவர்களுடன் சிரிக்காதிருத்தல்.
  4. பெயரைச் சொல்லி அழைக்கும்போது, செவிமடுக்காதிருத்தல்.
  5. ஏனையவர்களுடன் எந்தவொரு நெருக்கமுமின்றி, தன்னுடைய உலகத்தில் இருத்தல்.
  6. மற்றைய பிள்ளைகளுடன் விளையாடுவதை விட, தனிமையில் விளையாடுவதை விரும்புதல்.
  7. மீண்டும் மீண்டும் ​ஒரே செயற்பாட்டை மேற்​கொள்ளல்.
  8. காரணமின்றி மேற்கொள்ளப்படும் உடல் அசைவுகள். (மீண்டும் மீண்டும் குதித்தல், இரு புறமாக அசைதல், முன்னால் ​வலைந்து, பின்னால் அசைதல்)
  9. விளையாட்டுப் பொருள்களை, வரிசையாக அடுக்குதல்.
  10. சுற்றும் பொருள்கள் மீது (மின்விசிறி, வாகனங்களின் டயர்கள்) அதிக அவதானம் செலுத்தல்.
  11. விளையாட்டுப் பொருள்களுடன், அந்தந்த வகையில் விளையாடாதிருத்தல். (விளையாட்டுக் காரொன்றைச் செலுத்திப் பார்க்காமல், அதை மறுபுறம் புரட்டி, டயர்களைச் சுற்றிப் பார்த்தல்)
  12. ஒரே விளையாட்டை, மீண்டும் மீண்டும் விளையாடுதல்.
இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படைக் கூறுகள். 

Dr. Leo Kanner
1943-ல் டாக்டர் லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர் தான் ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட் (Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார் . அதில்தான் உலகில் முதன்முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சினைகள் பேசப்பட்டன.

Hans Asperger
சரியாக அதே நேரத்தில் டாக்டர். ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (Hans Asperger) என்பவரும் இதே வகைக் குறைபாடுகளை சற்றே வளர்ந்த பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். 1944ல் அவர் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பிற்காலத்தில் ஆட்டிசத்தின் இவ்வகைக்கு (பேசக் கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுதலில் சிரமம் உடைய) குறைபாட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.

Donald Triplett
கானரின் ஆராய்ச்சியில் முதல் முதலாக ஆட்டிச பாதிப்புக்குள்ளானவராக கண்டறியப்பட்ட டோனால்ட் (Donald Triplett ) என்பவர் முழுக்க குணமடைந்து இயல்பான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் என்கிற தகவல் 2010ல் கண்டறியப்பட்டபோது அது ஆட்டிசக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது.

அத்தோடு அமெரிக்காவில் இயங்கி வரும் தேசிய குழந்தை நலம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் National Institute of Child Health and Human Development (NICHD) அறிக்கையில் கீழ்கண்ட 5 பண்புகள் உங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் அந்த குழந்தை ஆட்டிஸம் குறைபாடு உள்ளதா என்பதனை ஆய்வுசெய்ய வேண்டும் என்று கூறுகின்றது.

  1. 12வது மாதத்தில் அழுது புலம்பாமலும் மழழை ஒலி எழுப்பாமல் இருப்பது
  2. 12வது மாதத்திற்கு பிறகு தனது தேவைக்காக எதனையும் சுட்டிக்காட்டாமல் இருப்பது
  3. 16வது மாதத்தில் ஒரு சொல் வார்த்தைகள் பேசாமல் இருப்பது
  4. 24வது மாத்தில் இரு சொற்கள் கொண்ட சொந்த வார்த்தைகள் பேசாமல் இருப்பது
  5. சமூக மற்றும் மொழிதிறனற்று இருத்தல் – இது எந்த வயதிலும் தென்படலாம்.

எவ்வாறாயினும், ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையொன்றுக்கு, மேற்கூறப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவற்றில் ஒன்றேனும் இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எப்படியும், ஒரு குழந்தை, ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி, அது குறித்த நிபுணத்துவமிக்க வைத்தியரொருவராலேயே கண்டறிய முடியும்.

ஆட்டிசத்தின் வகைகள் 

"அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்", (Asperger syndrome)

பெரும்பாலும் பதின்ம வயதுகளிலேயே இக்குறைபாடு கண்டறியப்படுகிறது. இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பேசுவதிலும் புரிந்துகொள்ளும் திறனிலும் எந்தக் குறைபாடும் இருக்காது. சொல்லப்போனால் இக்குறைபாடுள்ள குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் சராசரிக்கும் மேம்பட்ட அறிவுத் திறனைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். கீழே குறிப்பிடப்பட்டுள்ள மேதைகள் இவ்வகைக் குறைபாடு உள்ளவர்கள் தான். இதை "கீக் சிண்ட்ரோம், லிட்டில் புரொபசர் சிண்ட்ரோம்" எனவும் குறிப்பிடுவதுண்டு.

உதாரணமாக : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாச்சன் போன்றவர்கள், தவிர உலகின் பல அரிய  மேதைகளும் இந்த ஆட்டிச குறைபாடு உள்ளவர்கள்தான். ஆனால், அறிவுக்கூர்மைக்கும், இந்தக் குறைபாட்டுக்கும் தொடர்பில்லை. ஆட்டிச பாதிப்புள்ள ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகை மூலமாக மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாகவும் இருப்பதும் உண்டு.

'ரெட் சிண்ட்ரோம்'  (Rett syndrome)

இது பெண்குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும். தலைவளர்ச்சி மிகவும் மெதுவாக இருக்கும், கைகால்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது போன்றவை இதன் அறிகுறிகள். "சைல்ட்ஹுட் டிஸ்இன்டர்கிரேடிவ் டிஸ்ஆர்டர்" இந்த வகையினர் முதலில் சாதாரணமாக இருந்து பின்னர், பேச்சுத் திறன், பழகும் திறன் ஆகியவற்றை இழக்கிறார்கள்.

ஆட்டிஸம் ஏற்பட காரணம் என்ன?

இது தான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்வதற்கென்று எதுமில்லை ஆனால் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுபடி மரபியில் (பாரம்பரியம் – ஜீனிடிக்கல்), வளர்சிதை மாற்றத்தில் ஏற்படகூடிய குறைபாடு, நரம்பியல் மாற்றம், சிலவகையான தொற்று நோய்கள் மற்றும் பிறப்பின் போது ஏற்பட கூடிய கோளாறுகள் என பல்வேறு காரணிகளை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதே போல் சுற்றுபுற குழல் காரணிகள் கூட ஆட்டிஸம் ஏற்பட காரணமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

மூளையின் செல்களுக்கிடையே ஏற்படக்கூடிய ஒழுங்கற்ற தொடர்பு காரணமாக கூட இந்த குறைபாடு ஏற்படலாம். 

அத்தோடு மரபு ரீதியிலான காரணங்கள் வெறும் 0.5% க்கும் கீழே தான் இருக்கின்றன. சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது, மதுப்பழக்கம் (குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களிடம்), ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

கருவில் குழந்தை இருக்கும் போதும் மகப்பேறின் போதும் கழுத்தில் கொடி சுற்றுதல், (Meconium Aspiration) முதன்முதலாக வெளியேறும் மலம் குழந்தையின் சுவாசப்பாதைக்குள் நுழைதல், குழந்தை பிறந்த உடன் அழாமல் இருப்பது, பின்னாளில் ஏற்படும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சினைகளால், மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மூளையின் அமைப்பில் உள்ள மாறுபாடுகள் (structural abnormalities), அல்லது மூளையின் வேதித்தனிமங்களில் (chemical abnormalities) உள்ள குறைபாடுகளும் குழந்தையின் ஆட்டிசத்துக்கு காரணமாகலாம்.

ஆராச்சியாளர்கள் ஜீன்களின் ஒழுங்கற்ற கட்டமைப்பின் காரணமாக ஆட்டிஸம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றதா என ஆய்வு செய்து கொண்டிருயிருப்பதாக Autism Society என்ற இணையதளம் கூறுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆட்டிசம் பிள்ளைகளிடம் காணப்படும் குறைபாட்டுகள்

உருவக் குறைபாடுகள்

ஆட்டிசம் என்பது ஒரு ஸ்பெக்ட்ரம் டிஸ் ஆர்டர் (spectrum disorder) அதாவது மிதமானது முதல் தீவிரமானது வரை பலதரப்பட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எல்லோர்க்கும் ஏற்படுவது இல்லையெனினும் ஒருசில பெண் குழந்தைகளுக்கு Rett’s syndrome உள்ளிட்ட, உடலுக்கு பொருத்தமில்லாத சிறிய தலை, அல்லது கைகால்கள் இறுக்கமடைந்திருப்பது (spasticity) போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

அறிவுசார்ந்த இயலாமை

சிந்திப்பதில், கல்வி கற்பதில் இயலாமை, நுண்ணறிவதில் (IQ) ஏற்படும் குறைபாடுகள். வலிப்பு (seizures) ஏற்படுதல்

ஒட்டிசம் கண்டறியப்பட்டால் என்ன செய்ய வேண்டும். 

“ஓட்டிசம் குழந்தைகளை இனங்காண்பதற்கான மீள் ஒழுங்கமைக்கப்பட்ட வினாக்கொத்து.  (கீழே உள்ள லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது)

ஒட்டிசத்தை முதலிலேயே கண்டறிந்துகொண்டால், அதற்குரிய சிகிச்சைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். இதனால், குழந்தை தனது எதிர்காலத்தில் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளிலிருந்து காப்பற்றப்பட்டுவிடும். எவ்வாறாயினும், இந்த குறைபாட்டுக்குத் தேவையான சிகிச்சை, செயற்பாட்டு ரீதியிலான எதிர்வினைகளே ஆகும். அதாவது, பேச்சுப் பயிற்சி, வழிகாட்டல்கள், சமூகச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் என்பனவே, இவ்வாறான குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்றது.

அத்துடன், எப்போதும் இந்தக் குழந்தைகள், அதன் வயதுடைய ஏனைய குழந்தைகளுடன் இருக்க வழிசமைத்துக் கொடுங்கள். ஏனையோருடன் இணைந்துச் செயலாற்ற வழிவிடுங்கள். தொலைக்காட்சி, அலைபேசிப் பாவனைகளைத் தவிர்த்துவிடுங்கள், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி ஆகிய தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவு சீரான நிலைக்குக் கொண்டு வரமுடியும்.

ஆட்டிசம் கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்கிவிட வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்தல், பொது இடங்களில் குழந்தையால் அவமானம் என்று நினைப்பதை அறவே தவிர்க்க வேண்டும், குறிப்பாக குழந்தைக்கு இத்தனை வயது ஆகிவிட்டதே எனக் கவலைப்படக்கூடாது, குற்ற உணர்வு அறவே கூடாது, வித்தியாசமாக இருப்பதற்கான துணிச்சலை வரவழைத்துக்கொள்தல், குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் ஆட்டிசம் கொண்ட பிள்ளைகளை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாச்சன் மேதைகளாக உருவாக்க முடியும். 

ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது. இது ஒரு பெரிய ஆபத்தையும், குற்றவுணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.

எனினும் சர்வதேச ரீதியில் இவர்களைப் பற்றிய பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்த ஏப்ரல் 2-ம்தேதி உலக ஆட்டிஸம் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. அத்தினத்தில் ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளையும் அதன் பெற்றோர்களும் சந்தித்து, உரையாடுவதும் அக்குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுமென மேலை நாடுகளிலும் முயற்சிகள் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் எம் சார்ந்த சூழலிலும் இடம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தொகுப்பு :  H.M Sifnas (Hamy)BA (UNIVAL), NDT (NCoE), DSW (NISD), ICTT (DTET)

உசாத்துணைகள்

  1. https://www.newmannar.lk/2015/04/Mannar_66.html
  2. https://teachmore.lk/%E0%AE%95%E0%AF%81%E0%A
  3. https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baebc2bb3bc8-1/b86b9fbcdb9fbbfb9abaebcd
  4. https://www.virakesari.lk/article/53377
  5. https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0ஷ
  6. https://www.virakesari.lk/article/157790
  7. https://www.islamkalvi.com/?p=75319
  8. https://tamil.indianexpress.com/lifestyle/what-is-autism-serious-developmental-disorder/
  9. https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/symptoms-causes-and-treatment-of-autism-in-tamil/articleshow/88428499.cms