சாதாரணமாக பயிற்றப்பட்ட ஆசியர் ஒருவர் முதலாம் தரத்தை அடய 20 ஆண்டுகள் தேவைப்படும்.

  1. 3-l ------>  2-ll ------>  05வருடங்கள்.
  2. 2-ll  ------> 2-l------> 09வருடங்கள்.
  3. 2-l  ------> 1------>  06 வருடங்கள்.

சாதாரணமாக பட்டதாரி ஆசியர் ஒருவர் முதலாம் தரத்தை அடய 18 ஆண்டுகள் தேவைப்படும்

  1. 3-l ------> 2-ll ------> 03வருடங்கள்.
  2. 2-ll ------>  2-l ------> 09வருடங்கள்.
  3. 2-l ------> ------> 06வருடங்கள்.

எனினும் 

பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவர் -

2-ll தரத்தில் இருந்து 07 வருடங்களுக்குள் பட்டப்படிப்பை அல்லது கல்விமாணி படிப்பை நிறைவு செய்வாராயின் 07 வருடங்களில் 2-l ற்கு செல்ல முடியும். அத்தோடு 2- ll ல் இருக்கின்ற பயிற்றப்பட்ட ஆசியர் 05வருட காலத்திற்குள். ஆசியர் பயிற்சி+ பட்டம்+கல்வி முதுமாணி

OR

ஆசியர் பயிற்சி+கல்விமாணி+கல்வி முதுமாணி பெற்றுகொண்டால் 5 வருடங்களில் 2-l ற்க்கு செல்ல முடியும். 

2-ll இருக்கின்ற பட்டதாரி ஆசியர் ஒருவர் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாவை 07ஆண்டுக்குள் நிறைவு செய்வாராயின் 07ஆண்டுகளில் 2-l ற்க்கு செல்ல முடியும்.

2-ll இருக்கின்ற பட்டதாரி ஆசியர் ஒருவர் 05 வருடத்திற்குள் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா + கல்வி முதுமாணி யை நிறைவு செய்வாராயின் 05 வருடங்களில் 2-l ற்க்கு செல்ல முடியும்.

இவற்றோடு வினைத்திறன் தடைதாண்டல் (module) + இரண்டாம் மொழிபாடநெறி என்பன பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

நன்றி : இணையம்