போர்ட்போலியோ (Portfolio) என்பது ஒரு நபரின் திறமைகளை, அனுபவங்களை, சாதனைகளை, திறன்களை அல்லது தொழில்முறை படைப்புகளை அடங்கிய ஆவணங்களின் தொகுப்பாகும். பொதுவாக, இது ஒரு நபர் அல்லது குழுவின் செயல்பாடுகளை மற்றும் தொழில்முறை அனுபவங்களை விளக்கி காட்சிப்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. போர்ட்போலியோவின் முக்கிய நோக்கம், நபரின் திறமைகளை சிறப்பாக பிரதிபலிக்க மற்றவர்களுக்கு காண்பிப்பதாகும்.
போர்ட்போலியோ எவ்வாறான துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக :
- கலை மற்றும் கிராஃபிக்ஸ் - கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை போர்ட்போலியோவாக வழங்குவார்கள்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிப் படைப்புகள் மற்றும் திட்டங்களை போர்ட்போலியோவில் காண்பிக்க முடியும்.
- பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்கள் - தங்கள் கல்வி சாதனைகள், திட்டங்கள் மற்றும் பரிட்சை முடிவுகளை போர்ட்போலியோவாக வடிவமைக்கலாம்.
போர்ட்போலியோ ஆன்லைன் அல்லது ஃபிசிக்கல் வடிவில் இருக்கலாம், இதில் பிரபலமான ஆன்லைன் கருவிகள் மற்றும் தளங்கள் LinkedIn, Behance, Dribbble, WordPress, Blogspot, Google Sites போன்றவையாகும் இவ்வாறு காணப்படுகின்ற போது Google Sites இனை வைத்து மாதிரியான ஒரு போர்ட்போலியே ஒன்றினை உருவாக்குவது என்படி?
உருவாக்கும் முறை வீடியோ வடிவில் :
உருவாக்கப்பட்ட மாதிரி போர் போலியோ
0 Comments