பேசுவதில் முற்றாக ஏற்பட்டிருக்கும் / பேசும் போது பல்வேறு குறைபாடுகள் காணப்படல் போன்றவற்றை பேச்சுக்குறைபாடு என்று வரையரை செய்யலாம்.

பேச்சுக்குறைபாடு பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும் உச்சரிப்பில் சீரின்மை, ஒரு சொல்லை பல தடவைகள் உச்சரித்தல். பேசுவதற்று விருப்பமில்லாமல் இருத்தல் அறவே பேச முடியாதிருத்தல் என்று பேச்சுக்குறைபாட்டின் வடிவங்களi பல்வேறு தன்மையுடைன வாய் உள்ளன.

பேச்சுக்குறைபாடு உள்ள பிள்ளையிடம் காணப்படும் இயல்புகள்.

பேச்சுக் குறைபாடு உள்ள பிள்ளைகளிடம் பல்வேறு இயல்புகள் காணப்படும் அவற்றில் முக்கிய இயல்புகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  1. திக்கு வாய் 
  2. பேசுவதில் தாமதம்
  3. பௌனமாக இருத்தல்.
  4. பேசுவதில் தடுமாற்றம் ஏற்படல்.
  5. ஒரு சொல்லை பல தடவைகள் உச்சரித்தல்.
  6. கோபம் ஏற்படல்.
  7. பேசுவதில் நாட்டம் குறைவாக இருத்தல்.
  8. உச்சரிப்பு சீரில்லாது இருத்தல்.
  9. குழுச் செயற்பாடுகளில் நாட்டம் குறைவாக இருத்தல்.
  10. முன்வந்து செயற்படாமை.

பேச்சுக்குறைபாடுடைய பிள்ளைக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.

  1. பேச்சு முன் பயிற்றி வழங்குதல்.
  2. ஒலிகளை சரியான உச்சரிப்புக்களை செவிமடுப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல்.
  3. சொற்களை சரியாக உச்சரிக்கக் கேட்டல்.
  4. பிள்ளைகள் கூறும் விடயங்களைப் பொறுமையுடன் கேட்டல்
  5. பெற்றோர்களுயுடன் தொடர்புபட்டு அவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கி பிள்ளைகளின் பேச்சுக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை வீட்டில் மேற்கொள்ள வைத்தல்.
  6. குறைபாடுடைய மாணவர்களை குழு வேலைகளிலும்,விளையாட்டுக்களிலும் செயற்பாடின்றி இருத்தலைத் தவிர்த்தல்
  7. குறித்த பிள்ளையை முன்வைப்புகளைச் செய்வதற்கும், முன் வந்து பேசுவதற்கும் சில சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல்.
  8. எளிய தெளிவான சொற்களைப் பயன்படுத்திக் கற்பித்தலை மேற்கொள்ளுதல்
  9. தொடர்புள்ள உருவங்களைக் காட்டுதல்
  10. குறைபாடுடைய பிள்ளையின் பெற்றோரை வரவழைத்து வீட்டிலும் பேச்சுப் பயிற்சியினை வழங்குமாறு பரிந்துரை செய்தல்
இதனடிப்படையில்  கற்றலுக்கு மிகவும் பிரதானமாக அமைவது மொழியாகும்.  மொழி சிறப்பாக இருக்குமாயின் ஒரு பிள்ளை தனது கற்றலை சிறப்பாக மேற்கொள்ளும்.  

எனவே தான் பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில் ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

ஸிப்னாஸ் ஹாமி
SLTS (Islam) , Dip in Social Work (Marit), NCICTT, BA(R)

தொடரும் : 
  • இயக்கத் தொழில்பாட்டு கோளாருடைய பிள்ளைகள்.